திருகோணமலை, கந்தளாய் – சூரியபுர பகுதியில் ஆமணக்கு விதைகளை உட்கொண்ட எட்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவமானது (31.10.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சூரியபுர பாடசாலை வளாகத்தில் காணப்பட்ட ஆமணக்கு விதைகளை உட்கொண்ட சிறுவர்கள் ஆரம்ப சிகிச்சைக்காக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு சிறுவர்களில் மூன்று வயதுடைய சிறுவனும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
