தேவலாயத்தில் வெறியாட்டம்-8 பேர் பலி-35 பேர் காயம்

 

ஜோர்தானின் மத்தியப் பகுதியிலுள்ள சுராக் (Karak) மாகாணம், மூத் (Hmoud) பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற இறுதிச்சடங்கின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 35 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 தேவாலயத்துக்கு காரில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், திடீரென உள்ளே நுழைந்து அங்கு கூடியிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை.
 

தாக்குதல் நடந்த போது தேவாலயத்தினுள் சுமார் 150 முதல் 200 வரையிலான மக்கள் கூடியிருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

துப்பாக்கிச் சூடு சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாகவும், உயிருக்குப் பயந்து மக்கள் இருக்கைகளுக்கு அடியிலும் தரையிலும் விழுந்து தங்களைக் காப்பாற்ற முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

CCTV காணொளிகளின் அடிப்படையில், கைத்துப்பாக்கிகளுடன் வந்த மூவர் தாக்குதலை நடத்திவிட்டு, பிக் அப் (Pickup) ரக வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தாக்குதலில் காயமடைந்தவர்கள் சுராக் பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 

இந்தத் தாக்குதலுக்கு லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஔன் (Joseph Aoun) உட்படப் பல சர்வதேசத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Post a Comment