மாணவிகளுக்கு ஆபாச கணொளி காண்பித்து பாலியல் தொல்லை-அம்பாறையில் 55 வயது விரிவுரையாளர் கைது

 

அம்பாறை, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் மாணவிகளுக்கு ஆபாச காணொளிகளைக் காண்பித்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 55 வயதுடைய விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகளுக்கு மதிப்பெண்கள் வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீண்டகாலமாக அவர்களை அச்சுறுத்தி வந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தங்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு கல்வி பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில், பாதிக்கப்பட்ட மாணவிகள் நீண்டகாலமாக இது தொடர்பில் முறைப்பாடு செய்யாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் மாவட்ட மகளிர் பணியகத்தின் விசேட பொலிஸ் குழுவினர் நேற்று (01) சந்தேகநபரான விரிவுரையாளரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (02) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட மகளிர் பணியகத்தின் விசேட பொலிஸ் குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment