புதிய ஆசிரியர் சேவையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 30,000 ஆசிரியர்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று அறிவித்துள்ளார்.
இதில் இந்த ஆண்டிற்குள் 23,000 பட்டதாரி நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
பதுளையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி (NPP) மகளிர் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், 23,000 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான நேர்காணல்கள் இந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், கல்விப் பீடங்களில் கல்வி கற்கும் 6,000 டிப்ளோமா பட்டதாரிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் ஆசிரியர் சேவைக்குள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனுடன் கல்விமானி (BEd) தகுதி பெற்றவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுவதுடன், இதன் மூலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் புதிய ஆசிரியர் நியமனங்களின் மொத்த எண்ணிக்கை 30,00ாக உயரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
