தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ரூ.20 பில்லியன் இழப்பா? – மரிக்கார் எம்.பி. குற்றச்சாட்டு


 தரமற்ற நிலக்கரி இறக்குமதி விவகாரத்தால் இலங்கைக்கு சுமார் 20 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம். மரிக்கார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், நிலக்கரி கொள்முதல் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் சுமார் 18.39 பில்லியன் ரூபா நேரடி இழப்புசுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தரமற்ற நிலக்கரி காரணமாக மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், மாற்று மின்சாரத்தைக் கொள்முதல் செய்தல் மற்றும் மேலதிக நிலக்கரியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் செலவுகள் அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பிணையப் பிணை மற்றும் அபராதங்கள் மூலம் இழப்பை ஈடுசெய்ய முடியும் என்ற அரசாங்கத் தரப்பு கருத்தையும் அவர் விமர்சித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மரிக்கார் வலியுறுத்தினார்.

Post a Comment