நவம்பர் 1 முதல் புதிய நடைமுறை!

 

எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல், பல்வேறு நிதி மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, புதிய வங்கிக் கணக்குகளைத் திறத்தல், கடன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தல், வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு TIN சான்றிதழ் அவசியமாகும்.

மேலும், கட்டிட நிர்மாண அனுமதி பெறுதல் மற்றும் நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கும் இந்தச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வரி அடித்தளத்தை விரிவுபடுத்தவும், நிதிப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment