flydubai Flight 1073 விமானத்தில் ஏற்பட்ட அசாதாரணமான சம்பவத்தின் போது, காக்பிட்டில் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்ததாகக் கூறப்படும் இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் (Smit Machchhar), தனது காயங்களையும் பொருட்படுத்தாமல் பயணிகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த நிலையிலும் காக்பிட் கதவைத் திறக்க அவர் எடுத்த முயற்சி, இஸ்ரேலிய பயணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த விமானப் பணியாளர்களும் உள்ளே சென்று நிலைமையை கட்டுப்படுத்தவும், அனைவரின் பாதுகாப்புக்கும் உதவவும் வழிவகுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த தருணத்தில், 174 பயணிகளின் பாதுகாப்பே முதன்மை என்ற எண்ணத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த துணிச்சலான நடவடிக்கை பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்தியர்,இஸ்ரேலியர்,ஐக்கிய அரபு அமீரகத்தினர்
நாடுகள் வேறாக இருந்தாலும், மனிதநேயமும் துணிச்சலும் அவர்களை ஒரே தருணத்தில் ஒன்றிணைத்தன.
கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்கள் விரைவில் முழுமையாக குணமடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
மனிதநேயம் எல்லைகளை அறியாது…
துணிச்சல் எந்த நாட்டுக்கும் சொந்தமானதல்ல!
