அதிரடியாக கைதான மற்றுமொரு நபர்! - தலையில் கைவைத்த மஹிந்த!
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் ரேணுக பெரேரா, இலஞ்சம் அல்லது
ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
அவர் தவிசாளராகப் பணியாற்றிய காலத்தில் சட்டவிரோதமான முறையில்
பேருந்து பயண அனுமதிப் பத்திரங்களை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள்
தொடர்பிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியமை மற்றும் சட்டவிரோத நன்மைகளை வழங்கியமை ஆகிய
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேருந்துகளுக்காக 56 பயணிகள் போக்குவரத்து சேவை அனுமதிப்
பத்திரங்களை சட்டப்பூர்வ நடைமுறைகளுக்குப் புறம்பாகவும், வருடாந்தக் கட்டணங்களை ஒரே
முறையில் செலுத்தாமலும் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இன்று
(17) காலை 9:55 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் செயல் 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் விதிகள் மற்றும் 2014
செப்டம்பர் 19 ஆம் திகதியிட்ட அமைச்சரவை முடிவின் பரிந்துரைகளை மீறி
மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரான இவர், கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
