இரு பிள்ளைகளின் தந்தையை பலியெடுத்த வெள்ளம்
இன்று(ஞாயிற்றுக்கிழமை – 20) பெய்த கடும் மழை காரணமாக, கேகாலை மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவரும் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வெற்றிலையூர், ஹத்தாகொடை பகுதிலை் 33 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான சமந்த சேனரத் பண்டார என்ற நபர் ரிடிகஹ ஓயாவில் விழுந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை – 20) காலை உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, இன்று (ஞாயிற்றுக்கிழமை – 20) காலை லேவல பகுதியில் 80 வயதுடைய மூதாட்டி ஒருவர் ரிடிகஹ ஓயாவில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இதுவரை அவர் மீட்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
