பயாகல, கொஸ்ஹேன துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் மோட்டார் சைக்கிள், தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலதூவ பகுதியில் மீட்கபபட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள இறப்பர் தோட்டம் ஒன்றில் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (31) இரவு பயாகல பகுதியில் வீடொன்றிற்கு முன்னால் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பாதாள உலகக் குழு உறுப்பினரான 'பானந்துரே நிலங்க' என்பவரின் மைத்துனரான 'டிலா' என அழைக்கப்படுபவர் ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
