ஐ எம் எப் இன் பதிலில் உறைந்தார் ஜனாதிபதி - சற்றும் எதிர்பார்க்கவில்லை..!
இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் எவான் பாபேஜார்ஜியூ உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது, நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்ந்துள்ளதாகவும், அது சமீபத்திய பொருளாதார குறிகாட்டிகள் மூலம் வெளிப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடிப்படையில், நாட்டை ஒரு மாற்றத்திற்குரிய (மறுமலர்ச்சி) சகாப்தத்தை நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்துடன், இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வலுவான அடித்தளத்தையும் ஜனாதிபதி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
இதேவேளை, இலங்கை தற்போது அடைந்துள்ள விசேட பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
மேலும், வருவாயை அதிகரித்தல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் நிதி ஒழுக்கத்தைப் பேணுதல் ஆகியவற்றுக்காக கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
