புலம் பெயர் அகதிகள் தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் அதிரடி முடிவு

 

சட்டப்பூர்வ வசிப்பிடமில்லாத புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளுக்கு அனுப்பும் ஒப்பந்தங்களை இந்த ஆண்டிற்குள் நிறைவேற்ற ஐந்து ஐரோப்பிய நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையன்று டென்மார்க்கில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.  

ஜெர்மனி, ஆஸ்திரியா, கிரீஸ், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளின் சமீபத்திய முயற்சியாக, ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத ஒரு நாட்டுடன் திரும்பும் வசதிகள குறித்த உறுதியான நடவடிக்கைகளில் உடன்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஐந்துக் குழு' (Group of Five)  என்று அழைக்கப்படும் இந்த நாடுகள், திரும்பும் மையங்களை (return centres)  வெளியிடவில்லை.  

'மூன்றாம் நாடுகளுடன் இந்த ஆண்டிற்குள்ளாகவே ஒரு ஒப்பந்தத்தை அடைய விரும்புகிறோம்; இது திரும்பும் மையங்களை அமைக்க வழிவகுக்கும்' என்று ஜேர்மனிய உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டொப்ரிண்ட் கோபன்ஹேகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.  

இந்த ஆண்டு பல கூட்டங்களை நடத்தியுள்ள இக்குழு, செப்டம்பர் மாத இறுதியில் ஜெர்மனியின் மியூனிக் நகரில் மீண்டும் கூடத் திட்டமிட்டுள்ளது.  

புலம்பெயர்வுக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பாரிய சீராய்வை ஐரோப்பிய நாடாளுமன்றம் ஜூன் மாதம் அங்கீகரித்தது. 


இது நாடு கடத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதையும், உறுப்பு நாடுகள் வெளிநாடுகளில் மையங்களை அமைக்க அனுமதிக்கவும் வழிவகை செய்கிறது. 


ஆகையினால் இது புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பை பலவீனப்படுத்தக்கூடும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்

Post a Comment