Posts

அனோஜனனை காப்பாற்றுமா இலங்கை முஸ்லிம் சமூகம்?

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு பொது மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்க, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இன்றைய தினம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினரையும் சந்தித்துப் பொது மன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், ரிஷாட் பதியுதீன் அனோஜனின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். சவூதி அரேபிய அரசாங்கத்துடன் நேரடித் தொடர்புகளை வைத்துள்ள ஹிஸ்புல்லா, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் நினைத்தால் உடனடியாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கலாம். ஆனால், இவர்களும் இந்த விடயத்தில் மதவாத அரசியலை முன்னெடுக்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பிட்ட ஆறு கட்சிகளில் ரவூப் ஹக்கீமின் கட்சியும் அங்கம் வகிக்கும் நிலையில், அனைவரும் அனோஜன் விடயத்தில் தாமதப் போக்கையே கடைப்பிடிக்கின்றனர்.

Post a Comment