தியாக தீபம் திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டதைக் கண்டித்து, விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக இப் போராட்டம் நடைபெற்றது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளின் ஆரம்ப நாளான கடந்த 15ஆம் திகதி, தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள நினைவிடப் பகுதியில் இச் சிலை நிறுவப்பட்டது
தொடர்ச்சியாக 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், கடந்த சனிக்கிழமை (26) இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.
இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (27) யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் வருகை தந்த 20க்கும் மேற்பட்ட பொலிஸார், குறித்த சிலையை அங்கிருந்து அகற்றிச் சென்றதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.