இரு சிறுவர்களை பலியெடுத்த கைக்குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்று, பாதுக்க இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை 3.15 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவர் கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தார்.
இதற்காகச் சந்தேகநபர் முச்சக்கரவண்டியில் பயணிக்கும் விதம் அங்கிருந்த சிசிடிவி காணொளியில் பதிவாகியிருந்தது.
சந்தேகநபர் வீட்டின் கதவைத் தட்டியதுடன், வீட்டிலுள்ளவர்கள் கதவைத் திறந்தவுடன் வீட்டின் உள்ளே கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் ஆழ்ந்த நித்திரையிலிருந்த 11 மற்றும் 17 வயதுடைய இரு பிள்ளைகளும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலில் அவர்களின் 55 வயதுடைய தந்தையின் காலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குண்டுத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலைய
