மஹிந்தவின் கையாட்களின் தலைமீது விழும் அடுத்த இடி

மஹிந்தவின் கையாட்களின் தலைமீது விழும் அடுத்த இடி - பறிபோகும் சொத்துக்கள் - இடித்தழிக்க அதிரடி உத்தரவு

பம்லப்பிட்டியவிலிருந்து தெஹிவளை வரையிலான கடலோரப் பகுதியில் உள்ள விடுதிகள் உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்படாத கட்டடங்களை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர்  10 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவி;ககப்பட்டுள்ளது.

இத்தகைய கட்டடங்களை உரிமையாளர்கள் தாமாகவே வெளியேற்றுவதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் முடிவடைந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தேவையான அனுமதிகளைப் பெறாமல், அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் செல்வாக்குடன் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரக்கூடிய இந்தப் பகுதியில் பல அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் மற்றும் வணிகங்கள் நீண்டகாலமாக இயங்கி வந்துள்ளன.

இந்த அமலாக்க நடவடிக்கை பல கட்டங்களாகச் செயல்படுத்தப்படவுள்ளது. 

முதல் கட்டத்தின் கீழ், இப்பகுதியில் எட்டு நபர்களுக்குச் சொந்தமான 19 அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் மீதான இடிப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பஸிக் மற்றும் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரின் சகோதரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத் தளபதி ஒருவருக்குச் சொந்தமான விடுதிகளும் இந்த கடலோரப் பகுதியில் இருந்து அகற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கடலோரப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, கடலோரப் பகுதிக்குள் எந்தவொரு கட்டடத்தையும் நிர்மாணிப்பதற்கு உரிய அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறுவது கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்து.

Post a Comment