மொரட்டுவையில் சற்று முன்னர் பதிவான துப்பாக்கி சூடு

மொரட்டுவை, ராவதாவத்தை எம்மானுவேல் மாவத்தை பகுதியில் இன்று (9) இரவு 7.00 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் இலக்கு வைத்து இத்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இருப்பினும், இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் அல்லது பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்குலானை பகுதியைச் சேர்ந்த மொரட்டுவை நகர சபையில் பணியாற்றும் ஒருவரை இலக்கு வைத்தே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையே நிலவும் தகராறின் விளைவாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மொரட்டுவை பொலிஸாரால் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Post a Comment