இலங்கையை அதிர வைத்த விபத்து-பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் பலி

 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமையஇ தணமல்வில - அம்பேகமுவ வீதியில் அரம்பேகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் 43 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தணமல்வில நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கவிழ்ந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்திற்கு இணைக்கப்பட்டு சேவையாற்றியஇ காமினிபுர - தணமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஆவார்.

இதேவேளைஇ கெக்கிராவ நகரின் வெளிவட்டார வீதியில் உடற்பயிற்சி பூங்காவிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கடுகஸ்தோட்டை நோக்கிப் பயணித்த வேன் ஒன்றுஇ அதற்கு எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வதி சாரதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் கடுகஸ்தோட்டை - கொணஹென பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் ஆவார். 

இச்சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில்இ மொனராகலை - பதுளை வீதியில் தொலொபொவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் 50 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

முச்சக்கர வண்டியும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆணும் பெண்ணும் பலத்த காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்இ அங்கு அந்தப் பெண் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பாகப் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment