ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த இருவர் அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்குவதற்கு ஈரான் பயன்படுத்திய ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகள் மற்றும் அவை இலக்குகளைத் தாக்கிய விதம் தொடர்பான காணொளிகளைத் தமது கைபேசிகளில் சேமித்து வைத்திருந்தமைக்காகப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அசோகபுராவின் துங்கன்னாவப் பகுதியைச் சேர்ந்த 37 வயதான திசநாயக்க முதியன்செலகே பந்துல திசநாயக்க என்ற இவர்இ போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதத் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
கொழும்புஇ பொரளையை சேர்ந்த 36 வயதான சியம்பலாடுவ பாதிரனலகே ஹர்ஷ குமார என்ற இவர்இ ரேவி சூடாவின் நெருங்கிய ஆதரவாளரும்இ பூசா சிறைச்சாலைக் கலவரச் செயல்களில் ஈடுபட்டவரும் ஆவார்.
அபுதாபியிலிருந்து எதிஹாட் ஏர்வேஸ் விமானமான EY-392 மூலம் இன்று காலை 10.15 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவ்விருவரையும்இ குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்துஇ பந்துல திசாநாயக்க மேலதிக விசாரணைக்காகக் கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கும்இ ஹர்ஷ குமார கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
.jpg)