தனியார் பேரூந்து மோதி ஒருவர் பலி

 மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்பியங்கொடை வீதியில், ஹுலங்கமுவ வீதி சந்தியில் நேற்று (21) தனியார் பேருந்து ஒன்று பாதையைக் கடந்து சென்ற பாதசாரி மீது மோதியதில், பாதசாரி உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய வயோதிபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் விபத்து தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment