அஸ்வெசும தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வசும நலன்புரி நிதி ஒதுக்கீட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில், நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் பணியாற்றிய இளைஞர் மன்ற ஊழியர் ஒருவரும் அவரது மனைவியும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவையைச் சேர்ந்த கனகராஜ் என அடையாளம் காணப்பட்ட குறித்த இளைஞர் மன்ற ஊழியர், அஸ்வசும நலன்புரி நிதி ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசிரியையாக பணியாற்றி வந்த அவரது மனைவிக்கும் குறித்த நிதி முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவரும் ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் அதிகாரிகளால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முறைகேட்டின் தன்மை, அதில் தொடர்புடையவர்கள் மற்றும் நிதி தொடர்பான மேலதிக விபரங்கள் குறித்து விசாரணைகளின் பின்னர் மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment