ஜனாதிபதியை இன்று சந்திக்கவுள்ள இந்தி பாதுகாப்பு அமைச்சர்

 

இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (09) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (ஓய்வுபெற்ற) உள்ளிட்ட பலரையும் சந்திக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட இந்தோ-லங்காவில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இந்தப் பயணத்தின் போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment