கனடா பிரதமர் வெளியிட்ட வாழ்த்து செய்தி

கனடாவின் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அவர்கள், IMC 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான 2026 கிரிக்கெட் உலகக் கோப்பை (IMC Over-60s Cricket World Cup 2026) போட்டியையொட்டி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:

ஒன்ராறியோ மாகாணம் மிசிசாகாவில் நடைபெறும் IMC 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான 2026 கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவுன்சில் ஒஃப் கனடா மாஸ்டர்ஸ் கிரிக்கெட் மற்றும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சி, 14 நாடுகளிலிருந்து கிரிக்கெட் அணிகளை ஒன்றிணைத்து, அவர்களின் திறமைகளையும் விளையாட்டு வீரர்களின் மனப்பான்மையையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 

வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். 

இந்த அனுபவத்திலிருந்து ஒரு உற்சாகமான போட்டியின் இனிய நினைவுகளுடன் நீங்கள் திரும்புவீர்கள் என்பதில் ஐயமில்லை.

இந்தச் சாம்பியன்ஷிப் வெற்றிகரமாக அமைய உழைத்த ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் முயற்சிகளுக்கும், ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான முதுமையை ஊக்குவிக்கும் உங்கள் முயற்சிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக இதனை அனுபவிக்க வாழ்த்துகிறேன்.

மாண்புமிகு மார்க் கார்னி, P.C., O.C., M.P.

கனடா பிரதமர்


ஒட்டாவா


Post a Comment