கான்யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் சிறப்புப் படைப் பிரிவான 'நுக்பா'வின் தளபதி முகமது மஹ்மூத் மர்ஷாத் அல்-காடி கொல்லப்பட்டுள்ளார்.
காசாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கான்யூனிஸ் நகரில் இந்தத் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 7-ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
மேலும்இ ரக்பா பகுதியில் பிணைக் கைதிகளைச் சிறைபிடித்து வைத்திருந்த இவர் அண்மைக் காலமாக இஸ்ரேலுக்கு எதிராகப் புதிய பயங்கரவாதப் பயிற்சிகளை அளித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
