திருகோணமலையில் பரபரப்பு
திருகோணமலை - அனுராதபுர சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல மதுபானக் கடை ஒன்றில் நேற்றிரவு பூட்டை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ரொக்கப் பணம் மற்றும் விலையுயர்ந்த மதுபானப் பாட்டில்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்!
கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபடும் அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் கடையில் உள்ள CCTV கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
இக்காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள உப்புவெளி காவல் துறையினர், CCTV காட்சிகளின் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணிகளையும், அவர்களை விரைந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
