ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் கித்துல்கல பகுதியிர், நேற்று மாலையில் பெரிய பலா மரம் ஒன்று மின்சாரக் கம்பிகளுடன் வீதியில் முறிந்து விழுந்ததால் அவ்வீதியூடான வாகனப் போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டது.
இது குறித்து மேற்கொண்ட விசாரணையில் கருத்து தெரிவித்த கித்துல்கல பொலிஸ் அதிகாரி ஒருவர், இப்பகுதியில் நிலவிய மழை மற்றும் பலத்த காற்று காரணமாகவே இந்த பலா மரம் மின்சாரக் கம்பிகள் மீது முறிந்து விழுந்து, பின்னர் மின் கம்பிகளுடன் சேர்ந்து வீதியிலும் விழுந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு மின்சாரக் கம்பிகள் அகற்றப்பட்டன. அதன் பின்னர் வீதியில் விழுந்த மரம் வெட்டி அகற்றப்பட்டு போக்குவரத்து வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்
