Posts

மஹிந்த தலைமையில் அநுராதபுரத்தில் பிரமாண்ட மக்கள் போராட்டம்!

 


விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் கூறி, அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சார்பில்  பாரிய மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த எதிர்ப்புப் பேரணி இன்று அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதே இந்த பேரணியின் முதன்மை நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment