அக்கரப்பத்தனை பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண்! உறவினர்களை தேடும் முயற்சி

நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனை நகரில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கும் நிலையில், அவர் பஸ் தரிப்பிடத்திலேயே தங்கியிருப்பதால் பாடசாலை மாணவர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர், அவரது பெயர் மற்றும் குடும்பத்தினர் தொடர்பான தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை.

எனவே, குறித்த பெண்ணை அடையாளம் காணக்கூடிய உறவினர்கள் அல்லது அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கோ தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும், பெண்ணின் பாதுகாப்பையும் நலனையும் கருத்திற்கொண்டு, அவரை உரிய முறையில் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று, அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மனிதநேயம் நம்மில் இருந்து ஆரம்பிக்கட்டும்.

இந்த செய்தியை அதிகளவில் பகிர்ந்து, குறித்த பெண்ணின் உறவினர்கள் அல்லது அவரை அறிந்தவர்கள் வரை தகவல் சென்றடைய அனைவரும் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஒருவரின் வாழ்க்கையில் நாம் செய்யும் ஒரு சிறிய உதவி, அவருடைய குடும்பத்துடன் மீண்டும் இணையும் பெரிய வாய்ப்பாக அமையலாம்

Post a Comment