கொழும்பு இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி
கொழும்பில் உள்ள இந்திய அமைதிப்படை (IPKF) நினைவிடத்திற்குச் சென்ற இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
கடந்த 1987 முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது வீரமரணமடைந்த இந்திய இராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
1987 அமைதி பேச்சு வார்த்தை என்று வந்த இந்திய தளபதி தன் உயர் ரக சுருட்டு பத்தி முடிகையில இந்த சாரம் கட்டிய பொடடியள்ட கதைய முடிப்பன் என்றார் கடைசி மட்டும் அடிச்சுதான் பார்த்தார் பாவம் இப்ப சில வருடங்களுக்கு முன் தான் தப்பு கணக்கு போட்டதாக தன் தோல்வியை ஒப்பு கொண்டார்.
இந்திய நாசாகார படைகளால் சீரழிக்கப்பட்ட ஈழத்து பெண்கள் மற்றும் யாழ் வைத்தியசாலையில் இவர்களால் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள் அப்பாவி ஈழத்து மக்களுக்காகவும் அஞ்சலி செலுத்துவாரா என கேள்வியாக உள்ளது
