சிங்கப்பூரிலிருந்து அனுப்பிய கடிதம்

 




















முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, "சிரிலிய சவிய" (Siriliya Saviya) நிதியத்துடன் தொடர்புடைய கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் வேறு ஒரு திகதியை கோரியுள்ளார்.

நோய்க்கான சிகிச்சை பெறுவதற்காகத் தான் வெளிநாட்டில் இருப்பதால், இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பிரிவில் முன்னிலையாக முடியாது என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் கடிதம் மூலம்  அறிவித்துள்ளார்.


மேலும், நாடு திரும்பியவுடன் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment