வவுனியா குடியிருப்பு மண்டபம் புத்தசாசன அமைச்சுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்

 !

வவுனியா நகரின் குடியிருப்பு பகுதியில் 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் குறித்த கட்டிடம், நீண்டகாலமாக இராணுவ முகாமாக பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், பின்னர் அரச அதிகாரிகள் ஒப்படைக்கப்பட்டது

அதன்பின்னர் குறித்த கட்டிடம் பாடசாலை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தமையுடன், பின்னர் தற்போது வவுனியா மாவட்ட சாரணர் சங்கத்தின் பயன்பாட்டில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு சமூக மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் இந்தக் கட்டிடம், தற்போது புத்தசாசன அமைச்சுக்கு வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை மக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதேவேளை, வவுனியா மாவட்ட மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சேவையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், வைத்தியசாலைக்கு அண்மையில் அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தை “ஒசுசல” அரச மருந்தகத்தின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

❓ தற்போது குறித்த கட்டிடம் எந்த நோக்கத்திற்காக வழங்கப்பட உள்ளது?

❓ இதற்கான அதிகாரப்பூர்வ தீர்மானம் என்ன?

❓ ஏற்கனவே கல்வி மற்றும் சமூகப் பயன்பாட்டில் இருந்து வரும் இந்தக் கட்டிடத்தின் எதிர்கால பயன்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளனவா?

❓ இந்த விடயம் தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நிலைப்பாடு என்ன?

📢 மக்களின் பயன்பாட்டுடன் நீண்டகாலமாக தொடர்புபட்டுள்ள இந்தக் கட்டிடம் தொடர்பில், அதன் எதிர்கால பயன்பாடு குறித்து அதிகாரப்பூர்வமானதும் வெளிப்படையானதுமான விளக்கம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

குறித்த கட்டிடத்தின் உண்மை நிலை என்ன?

அது யாருடைய பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட உள்ளது?



 

Post a Comment