லட்சுமி நாராயண ராஜயோகம்-இனி இவர்களுக்கு அனைத்தும் சுகம் தான்

 

ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செப்டம்பர் மாத இறுதியில் ஒரு அற்புதமான கிரக சேர்க்கை நிகழவுள்ளது. வேத நாட்காட்டியின் படி, சுக்கிரன் செப்டம்பர் 27 ஆம் திகதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார்.

இப்படிப்பட்ட ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது செப்டம்பர் இறுதியில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்

மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். அதுவும் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பங்குச் சந்தை, ஊடகம், ஐடி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சுக்கிரனின் அருளால் பண பிரச்சனை முடிவுக்கு வரும்.

தனுசு

தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். ஆடம்பர செலவுகளை அதிகம் செய்தாலும், நிதி நிலை சிறப்பாகவே இருக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். ஊடகம், மார்கெட்டிங் மற்றும் கலைத் துறையில் இருப்பவர்கள், தங்கள் வேலையில் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.

Post a Comment