ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமனக் கடிதங்களை வழங்கி வைப்பு
மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் (High Court Judges) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார், நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஆனந்தி கனகரத்னம், கொழும்பு மாவட்ட நீதிபதி ஞானேச லலித் கன்னங்கர ஆகியோர் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீதிச் சேவையின் விசேட தர அதிகாரிகளான பின்வருவோர் இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளனர்:
1. பெருமாள் சிவகுமார்: யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றி வரும் நீதிச் சேவையின் விசேட தர அதிகாரி.
2. செல்வி ஆனந்தி கனகரத்னம்: நீதிச் சேவை ஆணைக்குழுவின் (JSC) சிரேஷ்ட உதவிச் செயலாளராகக் கடமையாற்றி வரும் நீதிச் சேவையின் விசேட தர அதிகாரி.
3. ஞானேச லலித் கன்னங்கர: கொழும்பு மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றி வரும் நீதிச் சேவையின் விசேட தர அதிகாரி.
இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (23) முற்பகல் உரிய நீதிபதிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.
.jpeg)

