இன்று வங்கிகளுக்கு வரும் பணம்-அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி உதவிகள் இன்று (16) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.  

அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 992,053 பயனாளி குடும்பங்களுக்கு 9.18 பில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.  

இரண்டாம் கட்டத்தின் கீழ் பயன்பெறும் 213,335 குடும்பங்களுக்கு மொத்தம் 2.12 பில்லியன் ரூபாய் விடுவிக்கப்படவுள்ளது. 

பயனாளிகள் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக நாளை (17) முதல் இத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொட்டவலகெதர உறுதிப்படுத்தியுள்ளார்.

Post a Comment