சற்று முன் யாழில் விபத்து-ஒருவர் கவலைக்கிடம்

 

யாழ்ப்பாணம் கந்தர்மட பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலாலி வீதியூடாக யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளும் ஓட்டுமட வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் கந்தர்மட சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Post a Comment