கல்கிசை கொவிடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, 6,000 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாளுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்மலானை, கொளுமட சந்தைப் பகுதிக்கு அருகில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இரத்மலானை, பங்களாவ வீதி, ரஸ்டம் வத்தை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான 'படோவிட்ட அஸங்க' என்பவருக்காக, வெளிநாட்டில் இருந்தவாறு போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்லும் 'சுதாரக' என்பவரின் நெருங்கிய கூட்டாளி என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
