சற்று முன் நாட்டு மக்களுக்கு வளிமண்டள திணைக்களம் அவசர அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (13) முற்பகல் 10.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.

பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள்:

• மாகாணங்கள்: கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மற்றும் சபரகமுவ

• மாவட்டங்கள்: வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் குருநாகல்

இப்பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் மற்றும் காற்றினால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின்னல் தாக்கத்திலிருந்து பாத்துக்காத்துக்கொள்ள பாதுகாப்பு வழிகாட்டல்கள்:

• திறந்தவெளிகளிலோ அல்லது மரங்களின் கீழோ நிற்பதைத் தவிர்க்கவும்.

• வயல்வெளிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகளில் இருப்பதைத் தவிர்க்கவும்.

• மின் சாதனங்களின் இணைப்புகளைத் துண்டித்து (Unplug), தொலைபேசி (corded phones) பயன்பாட்டைக் குறைக்கவும்.

• சைக்கிள், டிராக்டர் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

Post a Comment