இலங்கையை அதிர வைத்த துப்பாக்கி சூடு-பெண் உட்பட இருவர் பலி{வெளியான அதிர்ச்சி காணொளி உள்ளே}

 

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு: பெண் உட்பட இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பத்தேகம, ஹல்பத்தொட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (27) காலை காரில் வந்த நபர் ஒருவர், பத்தேகம ஹல்பத்தொட்ட பகுதியில் உள்ள வீடொன்றிற்கு அருகில் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இரு பெண்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

காயமடைந்த இரு பெண்களும் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் ஒரு பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக காலி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment