ஈழத்தமிழர்களின் பேரெழுச்சி கண்டு பயத்தில் தியாகத்தின் சிலையை அகற்றிய பேரினவாதம்

நல்லூரடியில் இருந்த திலீபனின் உருவச் சிலை பொலிஸாரால் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில், இன்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

எந்தவிதமான முன்னறிவித்தலும் வழங்காமல் 15க்கும் மேற்பட்ட பொலிஸார் வாகனங்களில் வந்து, சப்பாத்து கால்களுடன் உள்ளே சென்று பலவந்தமாக அந்த சிலையை அகற்றிச் சென்றுள்ளதாக செல்வராசா கஜேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment