யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில், வல்லை முனீஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வல்லை முனியப்பர் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்துவிட்டு வீதிக்கு ஏறிய இளைஞர் ஒருவருடன் பூசகர் மோதுண்டு வீதியில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நேரத்தில் பின்னால் வந்த பட்டா வாகனம் ஒன்று பூசகர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த பட்டா வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் ஒன்றுடன் மோதி தடம்புரண்டுள்ளது.
உயிரிழந்த பூசகரின் சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
