சுற்றுலா வந்துகொண்டிருந்த வேளையில் சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாகக் கட்டுப்பாடு இழந்த கார் ஒன்று, சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று மதியம் 2:15 மணியளவில் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செனன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து சுற்றுலா மேற்கொண்டிருந்த பயணிகள் பயணித்த காரே, ஹட்டன் - கொழும்பு பிரதான சாலையில் அமைந்துள்ள செனன் பகுதியில் இவ் விபத்துக்கு முகம்கொடுத்துள்ளது.
இவ்விபத்தின்போது காரில் பயணம் செய்த இரு நபர்களும் தெய்வாதீனமாக எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளது.
சம்பவம் குறித்து ஹட்டன் வலயக் பொலிஸ் வலயத் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகரவின் பணிப்புரைக்கு அமைய, ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
