அதிவேகத்தில் சென்ற முச்சக்கரவண்டி கவிழ்ந்தது!

 ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இன்று (01) காலை 6 மணியளவில் ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ தோட்டப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், பின்புற ஆசனத்தில் பயணித்த பெண்ணொருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். இருவரும் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டியும் பலத்த சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment