கொழும்பு துறைமுகத்திற்கு வணிகக் கப்பல் ஒன்றை வழிநடத்தி வருவதற்காக அதில் ஏற முயன்ற மாலுமி ஒருவர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.
கொழும்பு துறைமுகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, உடனடியாகச் செயல்பட்ட கடற்படையினர், துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 163 கடற்கரை ரோந்துக் கப்பலைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதன்படி, கடலில் விழுந்த மாலுமியை குறித்த ரோந்துக் கப்பல் மூலம் பாதுகாப்பாக மீட்டு, துறைமுக செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு பிரிவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
