யாழில் இளைஞன் ஒருவரும் , யுவதியும் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞனும் யுவதியும் காதல் உறவில் இருந்ததாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து நேற்று முன் தினம் (13) இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த இருவரின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை , ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவு, இரு குடும்பத்தை மீளாத துயரில் ஆழ்த்தியுள்ளது.
அண்மைகாலமாக தமிழர் பகுதிகளில் இளையோரின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.
