டீசல் மாஃபியாவின் பிடியில் அரசு! – சஜித் குற்றச்சாட்டு


தற்போதைய அரசாங்க ம் எரிபொருள் மற்றும் டீசல் மாஃபியாக்களின் கமிஷன்களுக்கு அடிபணிந்து, நாட்டில் சூரிய சக்தி மின் உற்பத்தியை முற்றிலுமாக அழித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

சூரிய சக்தி துறைசார் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது உரையாற்றிய அவர், எதிர்க்கட்சியாக இருந்தபோது 100% புதுப்பிக்கத்தக்க சக்தி பற்றிப் பேசியவர்கள், இப்போது டீசல் மாபியாவின் பிடியில் வீழ்ந்துள்ளதாகச் சாடினார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை மீறி அமைச்சின் செயலாளர் சட்டவிரோத முடிவுகளை எடுப்பதாகவும், 37 ரூபாவாக இருந்த சோலார் யூனிட் விலையை 20 ரூபாவாகக் குறைத்து சிறிய அளவிலான தொழில்முனைவோரை அரசாங்கம் நடுவீதியில் கைவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக படித்த இளைஞர்கள் நிர்க்கதியாகி மூளைசாளிகளின் வெளியேற்றம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சோலார் துறைக்கு உடனடியாக முன்னுரிமை அளிக்குமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment