புதிய பொய்களை கூறுகிறார் அநுர - கடுமையாக சாடிய நாமல்

அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் எவ்வித சாதனைகளையும் செய்யாமல், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நாடு முழுவதும் சென்று "புதிய பொய்களை" கூறி வருவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சாடியுள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி தனது பழைய வாக்குறுதிகளை மறந்துவிட்டு, தற்போது மக்கள் கூட்டங்களில் புதிய வாக்குறுதிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்தார். 

எனவே, பொய் வாக்குறுதிகளை அளிப்பதை நிறுத்திவிட்டு, மக்களுக்கு உண்மையான சேவைகளை வழங்க முன்வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

மேலும், அரசாங்கம் பொறுப்பேற்ற போது எதிர்மறையாக இருந்த பணவீக்கம் தற்போது 8.1% ஆக உயர்ந்துள்ளதாகவும், பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.3% இல் இருந்து 4.1% ஆகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"ஜனாதிபதி 1,000 4G கோபுரங்களை அமைப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். ஆனால் 5G தொழில்நுட்பம் ஏற்கனவே வந்துவிட்டது என்பது அவருக்குத் தெரியவில்லை போலிருக்கிறது. 450 குளங்களைக் கட்டுவதாகக் கூறுகிறார்கள்; குறைந்தது வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இரண்டு குளங்களையாவது சுத்தப்படுத்தித் தாருங்கள்," என்று நாமல் ராஜபக்ஷ தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment