வெள்ளத்தின் சோகம் மாறுவதற்குள் நள்ளிரவில் அதிர்ந்த பூமி-பீதியில் மக்கள்

  

நேபாளத்தின் முஸ்தாங் மாவட்டம், லோமன்தாங் பகுதியில் நேற்று இரவு 9.38 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை அங்க்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இந்த நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே மேலும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்னிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

Post a Comment