அனோஜனை மீட்க நாளை போராட்டம்

சவூதி அரேபியாவில் தண்டனை எதிர்கொண்டு வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை, ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

கல்முனையில் உள்ள அனோஜனின் இல்லத்திற்குச் சென்ற இக்குழுவினர், உலர் உணவுப் பொருட்களை வழங்கியதுடன் அனோஜனை மீட்பதற்கான முயற்சிகள் குறித்தும் தெளிவுபடுத்தினர்.

பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்ததாவது:

"அனோஜனின் உயிரைப் பாதுகாக்க வலியுறுத்தி நாளை கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம். அத்துடன், சவூதி அரேபியத் தூதரகத்தில் மகஜர் கையளிப்பதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை (28) அனோஜனின் குடும்பத்தினரையும் கொழும்புக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளோம்."

இதன்போது ஊடகங்கள் முன் பேசிய அனோஜனின் தாயார், தன் மகன் செய்த தவறுக்காக மன்னிப்புக் கோரியதுடன், அவனை மீட்டுத் தருமாறு கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.


இச்சந்திப்பில் கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரும் கலந்துகொண்டு மொழிபெயர்ப்பு உதவிகளை வழங்கினார்.

Post a Comment