ஈழத்துத் தமிழ் திரைப்படமான 'அந்தோனி' (Anthony), 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மதிப்புமிக்க 99ஆவது ஆஸ்கார் விருது (Academy Awards) விழாவிற்கான இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ நுழைவுத் திரைப்படமாக (Official Entry) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது!'
சிறந்த சர்வதேச திரைப்படம்' (Best International Feature Film) பிரிவில் உலக நாடுகளின் படங்களுடன் இத்திரைப்படம் நேரடியாகப் போட்டியிட தகுதி பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தின் ஆழ்கடல் மற்றும் கடலோரப் பின்னணியில், கடலையே நம்பி வாழும் ஒரு சாதாரண மீனவக் குடும்பத்தின் வாழ்வாதாரப் போராட்டங்களையும், காதலையும் மையமாகக் கொண்டு உருவகிக்கப்பட்ட படமே இந்த 'அந்தோனி'.
உலகப் புகழ்பெற்ற 'Maestro' இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதன் மூலம் இந்த ஆஸ்கார் போட்டியில் அவர் இசையமைத்த இரண்டு படங்கள்
(இந்தியாவின் சார்பில் மராத்தி படம் 'கோந்தல்',இலங்கை சார்பில் 'அந்தோனி')
வெவ்வேறு நாடுகளின் பிரதிநிதிகளாக களம் காண்பது மற்றுமொரு வரலாற்றுச் சாதனை!
இயக்கம்: சுகிர்தன் கிறிஸ்துராஜா & ஜெனோசன் ராஜேஸ்வர்.
தயாரிப்பு: ஓசை ஃபிலிம்ஸ் (Osai Films), கனா புரொடக்ஷன்ஸ் & ட்ரீம்லைன் புரொடக்ஷன்ஸ்.
நடிப்பு: கயல் வின்சன்ட்,டிஜே பானு,சுதர்சன் ரவீந்திரன் மற்றும் பலர்.
இலங்கைத் தமிழ் சினிமாவில் முதன்முறையாக உலகத்தரம் வாய்ந்த 'Arri Alexa SXT' கேமரா தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நன்கு உறுதிப்படுத்திக்கொண்டு போடவும்.


