70 பேர் மரணம் - பலரை காணவில்லை
சூடானின் மேற்கு கோர்டோ மாநிலத்தில் தங்கச் சுரங்கம் ஒன்று சரிந்து விழுந்ததில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
அல்-நு{ஹத் நகருக்கு அருகிலுள்ள அல்-சரா சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை அன்று, அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருந்த சுரங்கத் துகள்கள் சரிந்து விழுந்ததில் ஏராளமான கைவினைஞர் முறைச் சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதோடு பலர் சிக்கிக்கொண்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தளர்வான மற்றும் மணற்பாங்கான மண்ணில் உள்ளவர்களை மீட்கும் பணியில் எந்தவொரு சிறப்பு மீட்புக் குழுவும் இணையவில்லை என்றும், உள்ளூர் மக்கள் சாதாரண எளிய கருவிகளைக் கொண்டு போராடி வருவதாகவும் அந்தக்குழு மேலும் கூறியது.